மாவடிவேம்பு வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டர் சைக்கிளொன்று பஸ்ஸொன்றுடன் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இன்று(31) காலை 9 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 54 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டர் சைக்களில் பயணித்த மற்றுமொருவர், மேலதிக சிகிச்சைகளுக்காக மாவடிவேம்பு வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவௌி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
235 Views
Comments