24 மணித்தியாலங்களில் 906 பேர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
25

24 மணித்தியாலங்களில் 906 பேர் கைது

24 மணித்தியாலங்களில் 906 பேர் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவினரில் இருவர் கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



35 மற்றும் 38 வயதான இருவரே சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இதேவேளை, நள்ளிரவு 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இவர்களில் 862 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களாவர்.



போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் விசேட அதிரடி படையினரினால் பட்டியலிடப்பட்டிருந்த 21 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



அத்துடன் குற்றப்பிரிவினரால் பட்டியலிடப்பட்டிருந்த 44 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்த சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின், ஐஸ், கஞ்சா, மாவா, போதைவில்லைகள் உள்ளிட்ட பெருமளவான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

views

229 Views

Comments

arrow-up