நகுலேஸ்வர பெருமான் தேவஸ்தான ஆதீன கர்த்தாவின் புகழுடல் அக்கினியில் சங்கமமானது...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
25

நகுலேஸ்வர பெருமான் தேவஸ்தான ஆதீன கர்த்தாவின் புகழுடல் அக்கினியில் சங்கமமானது...

நகுலேஸ்வர பெருமான் தேவஸ்தான ஆதீன கர்த்தாவின் புகழுடல் அக்கினியில் சங்கமமானது...

கீரிமலை நகுலேஸ்வரப் பெருமான் தேவஸ்தான ஆதீன கர்த்தா இராஜராஜ ஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ ந.குமாரசுவாமி குருக்களின் புகழுடல் அக்கினியில் சங்கமமானது.

 

இலங்கையின் மூத்த சிவாச்சாரிய பெருந்தகையாக போற்றப்பட்ட அமரர் இராஜராஜ ஸ்ரீ நகுலேஸ்வரக் குருக்களின் மகனான அன்னார், தந்தையின் மறைவிற்கு பின்னர் கடந்த ஆண்டிலிருந்து கீரிமலை நகுலேஸ்வரத்தின் ஆதீன கர்த்தாவாக தொண்டாற்றி வந்தார்.



உடல்நலக் குறைவிற்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிவஸ்ரீ ந.குமாரசுவாமி குருக்கள் கடந்த 20 ஆம் திகதி அதிகாலை தனது 71ஆவது வயதில் சிவப்பிராப்தி நிலை எய்தினார்.



அன்னாரின் இறுதிக்கிரியைகள் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வளாகத்தில்  நடைபெற்றன.



அன்னாரின் புகழுடலுக்கு அதிகளவிலானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.



இறுதிக்கிரியைகளைத் தொடர்ந்து ந.குமாரசுவாமி குருக்களின் புகழுடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

views

243 Views

Comments

arrow-up