ரஷ்ய தலைநகருக்குள் நடந்த கோர தாக்குதல்! நாடுமுழுவதும் புடினின் விடுத்த உத்தரவு

ரஷ்யாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து ரஷ்யாவில் நாள் முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கும்படி அதிபர் புடின் உத்தரவிட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றியுள்ளார்.
ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை(22) இரவில் பிக்னிக் என்ற பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டதுடன் உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் மற்றும் வெடிகுண்டு வீசியும் தாக்குதலை நடத்தியது.
இதனால், உள்ளே இருந்த அனைவரும் அலறியடித்து ஓடியதுடன் இந்த தீ விபத்தில் இசை அரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததோடு புகை அரங்கம் முழுவதும் பரவியது.
இதுபற்றி ரஷ்ய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளதுடன் அவர்களில் மூன்று பேர் குழந்தைகள் எனவும் 182 பேர் காயமடைந்துள்ளதாகவும் 100 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதோடு பலரின் நிலைமை கவலைக்கிடமாவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவில் சில நாட்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் புடின் வெற்றி பெற்று மீண்டும் ஐந்தாவது முறையாக அதிபரான நிலையில் தொடர்ந்து பதவி காலம் முழுவதும் அதிபராக நீடிப்பதனால் உக்ரைனுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் போர் தீவிரமடைய கூடும் என்றும் கூறப்படுகின்ற நிலையில் இந்த சூழலில் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரஷ்யாவில் நாள் முழுவதும் அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கும்படி அதிபர் புடின் உத்தரவிட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஒன்றை தன்னுடைய வீட்டில் இருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்றியுள்ளார்.
இதனால் அந்நாட்டின் அனைத்து அரசு கட்டிடங்களிலும் நேற்று(24) ஒரு நாள் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்ததுடன் இந்த தாக்குதல் பற்றி புடின் தெரிவிக்கையில் தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைனுக்கு தப்பியோட முயற்சித்ததுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளதாக சுட்டிக்காட்டியள்ளார்.
217 Views
Comments