முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
25

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

 

இன்று(25) முற்பகல் 10.30 அளவில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான அவரிடம் பிற்பகல் 3.50 வரை வாக்குமூலம் பெறப்பட்டதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். 

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் என அவர் கடந்த 22 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

views

233 Views

Comments

arrow-up