மழை பெய்யாவிட்டால் மின் நெருக்கடி தீவிரமடையும் அறிகுறிகள்!

எதிர்வரும் காலங்களில் மழை பெய்யாவிடில் மின்சார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீர் மின் நிலையங்களில் உள்ள நீர் இன்னும் 10 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் எரிபொருளோ டீசலோ கிடைக்காவிட்டால் மின்சார உற்பத்தியில் தாமதம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நாட்களில் நீர் மின்சாரத்தில் 9 மில்லியன் யூனிட் மின்சாரம் பெறப்படுவதாகவும், இந்நிலைமையால் எதிர்காலத்தில் மின்சார விநியோகம் மோசமாகும் எனவும் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலபிட்டிய ஆலையின் மின் உற்பத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளது.
415 Views
Comments