மேல் மாகாணத்தில் பாடசாலை தவணைப் பரீட்சைகளில் மாற்றம்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
18

மேல் மாகாணத்தில் பாடசாலை தவணைப் பரீட்சைகளில் மாற்றம்!

மேல் மாகாணத்தில் பாடசாலை தவணைப் பரீட்சைகளில் மாற்றம்!

மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தவணைப் பரீட்சைகளை நடாத்துவதில் கடதாசி மற்றும் மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டினால் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் விசேட கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

 

எனவே, 6, 7, 8 ஆம் தரங்களுக்கான ஆண்டிறுதி பரீட்சையை திருத்தியமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதன்படி மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் வினாத்தாள்களின் பிரகாரம் தவணைப் பரீட்சையை நடாத்தக்கூடிய சகல பாடசாலைகளும் அந்த அட்டவணையின்படி பரீட்சையை நடாத்த முடியும்.

 

இதுபோன்ற பரீட்சைகளை நடத்துவதில் சிரமம் உள்ள பாடசாலைகளுக்கு, பாடசாலை ரீதியில் வினாத்தாள்கள் மற்றும் அட்டவணைகள் தயாரித்து பரீட்சை நடத்தலாம்.

 

4, 9, 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான ஆண்டிறுதி பரீட்சைகளை ஏப்ரல் விடுமுறையின் பின்னர் நடத்த மேல் மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

views

389 Views

Comments

arrow-up