பூரண தடுப்பூசிக்கான நிபந்தனைக் குழு அமைச்சர் தலைமையில் கூடியது

பூரண தடுப்பூசிக்கான நிபந்தனைக் குழு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் கூடியது.
சுகாதார அமைச்சில் இடம்பெறும் இந்த சந்திப்பில் சுகாதார பணிப்பாளர் நாயகம் கலந்துகொண்டுள்ளார்.
ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பிறகு பூரண தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் பெற்றிருந்தால் மட்டுமே பூரண தடுப்பூசியாக கருதப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படுமென தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
356 Views
Comments