இரு பஸ்கள் விபத்துக்குள்ளானதில் 2 பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்...

பசறை - நமுனுகுல வீதியின் 10ஆம் தூண் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் தனியார் பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இன்று பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் இரண்டு பேரூந்துகளின் சாரதிகளும் காயமடைந்துள்ளதுடன், அவர்களின் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
344 Views
Comments