MAR
18
நிவாரணம் வழங்க தயார் - பிரதமர்

நாட்டு மக்கள் இன்று மிகவும் கடினமான நிலையில் உள்ளதை தானும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை நவனெலிய ஸ்ரீ போதிருக்கராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சைத்திய கோபுர திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
352 Views
Comments