முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்களை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு நீதியமைச்சருடன் கலந்துரையாடலில்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்களை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு நீதியமைச்சருடன் கலந்துரையாடலில்...

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்களை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு நீதியமைச்சருடன் கலந்துரையாடலில்...

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

முஸ்லிம் திருமணச் சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்ணின் திருமண வயதை 18 ஆக உயர்த்துதல் மற்றும் திருமணத்தின் போது பெண்களுக்கு திருமணச் சான்றிதழில் கையொப்பமிட வாய்ப்பு வழங்குதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பலதார திருமணம் தொடர்பான ஒப்பீட்டு ஆய்வில் ஈடுபடுவது பொருத்தமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாக அனைத்து முஸ்லிம் சட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, முஸ்லிம் சட்டத்தில் எவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து யோசனைகளை முன்வைத்து உரிய திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் வரை உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார். .

views

81 Views

Comments

arrow-up