தனியார் பேருந்து சேவைகள் 80 சதவீதம் குறைந்துள்ளன
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
15

தனியார் பேருந்து சேவைகள் 80 சதவீதம் குறைந்துள்ளன

தனியார் பேருந்து சேவைகள் 80 சதவீதம் குறைந்துள்ளன

தனியார் பேருந்துகள் 80 வீதம் இயங்காத நிலையில் இருப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

சராசரியாக சுமார் 25 முதல் 30 பேருந்துகள் செல்லும் சில சாலைகளில் நேற்றைய தினம் இரண்டு பேருந்துகள் மாத்திரமே சேவையாற்றியதாகவும் கிராமிய வீதிகளில் பேருந்துகளின் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பொது போக்குவரத்து சேவையில் தனியார் பஸ்கள் கணிசமான பங்களிப்பை வழங்குவதாகவும், தனியார் பஸ்களின் எரிபொருள் பிரச்சினை குறித்து கலந்துரையாடி தீர்க்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

views

334 Views

Comments

arrow-up