பயப்பட வேண்டாம், நான் பதவி விலக மாட்டேன் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
26

பயப்பட வேண்டாம், நான் பதவி விலக மாட்டேன் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

பயப்பட வேண்டாம், நான் பதவி விலக மாட்டேன் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

தான் பதவி விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

அலரிமாளிகையில் இன்று (26) நடைபெற்ற அரசாங்கக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் மாகாண சபை மன்றத்திற்கும் இடையிலான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக் கூடாது என மாகாண சபை உறுப்பினர்கள் மன்றம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

“இல்லை, நான் இராஜினாமா செய்ய மாட்டேன். பயப்பட வேண்டாம்"

views

530 Views

Comments

arrow-up