ரம்புக்கனை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது

ரம்புக்கனை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 18 வயதுடைய இளைஞனை பிணையில் விடுவிக்குமாறு கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று (20) இரவு உத்தரவிட்டார்.
சந்தேகநபர் நேற்றிரவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரை இன்று (21) காலை கேகாலை நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு கேகாலை நீதவான் பிணையில் உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 28ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுகூடல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தனர்.
402 Views
Comments