25ம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்கள் கிடையாது - லிட்ரோ

கையிருப்பு இல்லாததால் எரிவாயு சிலிண்டர்களை வரும் 25ம் திகதி வரை சந்தைக்கு வெளியிட முடியாது என லிட்ரோ தெரிவித்துள்ளது.
எரிவாயு கையிருப்பு குறைந்ததையடுத்து கடந்த 12ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தினால் சந்தைக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
தலா 3600 மெட்ரிக் தொன் எடையுள்ள இரண்டு கப்பல்கள் இம்மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு எரிவாயு சிலிண்டர்களை மீண்டும் வெளியிட முடியும் என்று லிட்ரோ தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் மற்றும் தகனங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு எரிவாயுவை தொடர்ந்து வெளியிடுவதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
இதனிடையே எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
533 Views
Comments