ரம்புக்கனை வழக்கு: B அறிக்கையில் உள்ள உண்மைகளை மாற்றியமைக்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய உயர் பொலிஸ் அதிகாரி

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட ‘B’ அறிக்கையின் பல பிரிவுகளை டிபெக்ஸ் திரவத்தைப் பயன்படுத்தி நீக்கியமைக்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கேகாலை நீதவான் நீதிமன்றில் நேற்று (20) இரவு மன்னிப்பு கோரியுள்ளார்.
ரம்புக்கனை போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் நடத்திய விசாரணையின் போது பொலிஸ் அதிகாரி பொலிஸாரிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.
பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட 'B' அறிக்கையின் சரத்துக்கள் மோசடியான முறையில் நீக்கப்பட்டமை மற்றும் மாற்றியமைக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாட்டாளரின் சட்டத்தரணிகள் நேற்று இரவு நீதவானின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்படும் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
497 Views
Comments