சுங்கம் தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
22

சுங்கம் தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

சுங்கம் தொடர்பான விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

இலங்கை சுங்கம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த அறிக்கை இன்று (22) காலை கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஷிரான் குணரத்னவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 

சுங்கத்துறைக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து, அறிக்கை அளிக்க கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

 

சுங்க அதிகாரிகள், சுங்கச் சங்கங்கள், அரசு மற்றும் தனியார் துறை அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் சுமார் ஒரு வருட ஆலோசனைக்குப் பிறகு 117 பரிந்துரைகள் மற்றும் 530 பக்கங்களைக் கொண்ட இந்த இறுதி அறிக்கையை ஆணையம் தயாரித்துள்ளது.

 

இலங்கை சுங்கத்தின் நிறுவன, நிர்வாக மற்றும் செயற்பாட்டுச் செயன்முறைகளை வினைத்திறனுடன் செயற்படுத்துவது தொடர்பான பரிந்துரைகள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

இந்த அறிக்கையை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

views

68 Views

Comments

arrow-up