விவசாயிகளை பாதுகாக்க புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
31

விவசாயிகளை பாதுகாக்க புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்

விவசாயிகளை பாதுகாக்க புதிய வரியை அறிமுகப்படுத்த திட்டம்

விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் புதிய வரியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 

விசேட பண்டங்கள் வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இரத்து செய்யப்படுவதுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

 

உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்க உடனடியாக அறிமுகம் செய்யக்கூடிய வரியாக குறித்த விசேட வர்த்தக வரியை அறிமுகப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், வரி அமுல்படுத்தப்படும் காலத்தில் நாட்டில் காணப்படும் பொருட்களுக்கு அதிக பெறுமதி வழங்கப்படுவதால், மக்களுக்கான நிவாரணம் கிடைக்காமல் போகலாம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

views

239 Views

Comments

arrow-up