இன்று மாலை நாட்டின் பல பிரதேசங்களுக்கு கனமழை

மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை இரவு 10 மணி வரை நீடிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
323 Views
Comments