வெலிமடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயம்

வெலிமடை கெப்பெட்டிபொல வீடமைப்புத் திட்டத்தில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் இரு குழந்தைகள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் செயலிழந்ததால், குடியிருப்பாளர்கள் மெழுகுவர்த்தியை எடுத்து சோதனை செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
ஜெனரேட்டருக்கு அருகில் இருந்த பெட்ரோல் போத்தல் தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண், சிறுமி மற்றும் சிறுவன் வெலிமடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
463 Views
Comments