கட்டுகஸ்தோட்டை தீ விபத்தில் காயமடைந்த தாயும் உயிரிழந்துள்ளார்

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புரவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 66 வயதுடைய தாய் உயிரிழந்துள்ளார்.
கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 24ஆம் திகதி காலை வீட்டுக்கு வந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் வீட்டில் இருந்த 30 வயதுடைய மகளை தீ வைத்து எரித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
71 வயதான தந்தை, 30 வயது மகள் சந்திரவதனி மற்றும் மகளின் காதலன் என கூறப்படும் நபரும் வீட்டில் உயிரிழந்துள்ளனர்.
தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய், தனது 30 வயது மகளுக்கு தனது காதலன் தீ வைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
440 Views
Comments