மின் கம்பத்துடன் மோதி பஸ் ; ஐவர் காயம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
06

மின் கம்பத்துடன் மோதி பஸ் ; ஐவர் காயம்

மின் கம்பத்துடன் மோதி பஸ் ; ஐவர் காயம்

மட்டக்களப்பு, ஏறாவூர் - செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

 

கல்முனையில் இருந்து மஹரகம நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், இன்று(06) அதிகாலை ஒரு மணியளவில் செங்கலடி பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

 

குறித்த பஸ் வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதுண்டு வீதியோரம் இருந்த கடைத் தொகுதியிலும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

 

சம்பவத்தில் காயமடைந்த பஸ் சாரதி, நடத்துநர் உள்ளிட்ட ஐவர் செங்கலடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

views

210 Views

Comments

arrow-up