அங்கொட லொக்காவின் உதவியாளர் கட்டுநாயக்கவில் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
29

அங்கொட லொக்காவின் உதவியாளர் கட்டுநாயக்கவில் கைது

அங்கொட லொக்காவின் உதவியாளர் கட்டுநாயக்கவில் கைது

திட்டமிட்ட குற்றசெயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

போலியான பெயரில் பெற்றுக்கொண்ட கடவுட்சீட்டுடன் வௌிநாட்டிற்கு செல்ல முற்பட்ட வேளையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

 

விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி அடையாள இயந்திரத்தின் மூலம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

 

47 வயதான சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

views

233 Views

Comments

arrow-up