நாயாறு கடலில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

முல்லைத்தீவு - நாயாறு கடற்பகுதியில் நீராடச்சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று(28) மாலை கடலில் நீராடச்சென்ற நண்பர்களில் ஒருவர் அலையில் அடித்துச்செல்லப்பட்டார்.
கடற்படையினரும் கொக்குளாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் இணைந்து காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று(29) காலை குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
227 Views
Comments