மே தின பேரணிக்காக பஸ்களை கோரியுள்ள அரசியல் கட்சிகள்

இம்முறை மே தின பேரணியை முன்னிட்டு பல அரசியல் கட்சிகளும் பஸ்களை கோரி விண்ணப்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த கோரிக்கைகளுக்கு அமைவாக கட்சிகளுக்கு தேவையான பஸ்களை வழங்குமாறு அனைத்து டிப்போக்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.
விசேட சுற்றுலாப் பயணங்களுக்கான பஸ் கட்டணத்தின் அடிப்படையில் இவை கட்சிகளுக்காக வழங்கப்படவுள்ளன.
இதனிடையே, இம்முறையும் பல அரசியல் கட்சிகளால் மே தினக் கூட்டங்களுக்காக பஸ்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
229 Views
Comments