Battle of Little England கிரிக்கெட் சமரில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணி வெற்றி

நுவரெலியா காமினி தேசிய பாடசாலை உடனான வருடாந்த கிரிக்கெட் போட்டியில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணி வெற்றியீட்டியது.
நுவரெலியா காமினி தேசிய பாடசாலை மற்றும் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி Battle of Little England என அழைக்கப்படுகிறது.
இவ்வருடத்திற்கான வருடாந்த கிரிக்கெட் போட்டி நுவரெலியா மாநகர சபை பொது மைதானத்தில் நேற்று(28) ஆரம்பமானது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நுவரெலியா காமினி தேசிய பாடசாலை அணி 91 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணி 117 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
26 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த நுவரெலியா காமினி தேசிய பாடசாலை அணியால் 108 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.
அதற்கமைய போட்டியில் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியின் வெற்றி இலக்கு 83 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணி 8 விக்கெட் இழப்பில் கடந்தது.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 6 விக்கெட்களையும் கைப்பற்றி களத்தடுப்பில் பிரகாசித்த நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி அணியின் டொனி கிரேக் போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானார்.
244 Views
Comments