கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

மே தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரை அண்மித்து நாளை(01) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்காக 1,200-இற்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நகர வாகனப் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் புஷ்பகுமார குறிப்பிட்டார்.
அத்தியாவசிய காரணிகள் தவிர்த்து நாளை(01) காலை 11 மணிக்கு பின்னர் கொழும்பு வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
230 Views
Comments