ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது ஐந்து தீர்மானங்களுக்கு இணக்கம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் விடுதலை உள்ளிட்ட ஐந்து அவசர தீர்மானங்களுக்கு இணக்கம் காணப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமாகி சுமார் 3 மணித்தியாலங்கள் நீடித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
365 Views
Comments