அரச வைத்தியசாலைகளில் 40 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

தற்போது நாட்டில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுமார் 40 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மாகாண மருந்து வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 60 மருந்துகளின் இருப்பு ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை போதுமானதாக இருக்கும் என அதன் செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடனுதவியின் கீழ் மருந்து இறக்குமதியாளர்களுக்கு வசதி செய்ய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை வங்கியிடமிருந்து 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து 7 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கடிதங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலைமையைக் குறைக்க மேலும் 20 மில்லியன் டொலர்களை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
465 Views
Comments