உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

பதுளை, மடுல்சீமை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மெடிகஹதென்ன பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மெடிகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மடுல்சீமை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
212 Views
Comments