இன்று(13) முதல் மீள திறக்கப்படும் கோள் மண்டலம்

திருத்தப்பணிகளின் பின்னர் மக்கள் பார்வையிடுவதற்காக கோள் மண்டலம் இன்று(13) முதல் மீள திறக்கப்படவுள்ளது.
அதற்கமைய, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிக்கு பாடசாலை மாணவர்கள் கோள் மண்டலத்தை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
திருத்தப்பணிகளுக்காக கோள் மண்டலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது.
229 Views
Comments