தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
12

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று (12) நண்பகல் முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

 தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று உத்தியோகத்தர்கள் சங்கமும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கமும் இணைந்து பணிப்பகிஷ்கரிப்பினை முன்னெடுத்துள்ளன. 

 

தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் ஒன்றுகூடிய கல்விசாரா ஊழியர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்ட பின்னர் பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தனர்.

 

சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும், கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் கவனயீர்ப்பும் பணிப்பகிஷ்கரிப்பும் முன்னெடுக்கப்படுகின்றது.

views

232 Views

Comments

arrow-up