கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
13

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

 A9 வீதியின் கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

நேற்று(12) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன், எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

 

விபத்தில் கிளிநொச்சி - பொன்னகரைச் சேர்ந்த 35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

 

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

விபத்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

views

240 Views

Comments

arrow-up