வெடுக்குநாறி மலையில் சிவராத்திரியன்று கைதான 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை சிவராத்திரியன்று வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 8 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்குமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த வௌ்ளிக்கிழமையன்று சிவராத்திரி பூஜையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
263 Views
Comments