அரபிக்கடலில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தல்

அரபிக்கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு மீன்பிடி திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சோமாலிய கடற்கொள்ளையர்களின் படகுகளைக் கடத்தும் செயற்பாட்டை கருத்திற்கொண்டு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சோமாலிய கடல் வலயத்தில் இருந்து 700 கடல் மைல் தொலைவில் கிழக்கு திசையில் சர்வதேச கடற்பரப்பில் மிகவும் அபாயமான நிலை காணப்படுவதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளதாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு நீண்டநாள் மீன்பிடிப் படகுகள் இயலுமான வரை தற்போது பெயரிடப்பட்டுள்ள அபாய வலயத்தைத் தவிர்த்து அரபிக்கடலின் கிழக்கு பிராந்தியத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மீன்பிடி திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
228 Views
Comments