அரிசி விற்க மறுத்த 479 வியாபாரிகள் கைது!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
23

அரிசி விற்க மறுத்த 479 வியாபாரிகள் கைது!

அரிசி விற்க மறுத்த 479 வியாபாரிகள் கைது!

தற்போதைய அரிசி நெருக்கடி மற்றும் கட்டுப்பாட்டு விலை காரணமாக அரிசி விற்பனை செய்ய மறுத்த 479 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும், அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 106 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க நாடளாவிய ரீதியில் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கடந்த சில நாட்களில் சோதனைகள் தொடர்பாக 22 வழக்குகளை பதிவு செய்துள்ளது மற்றும் குற்றவாளிகளுக்கு 3 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

 

எவ்வாறாயினும், கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்கவோ, கொள்வனவோ செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

views

87 Views

Comments

arrow-up