காவல்துறை பாதுகாப்பில் இருந்தபோது உயிரிழந்தவர்கள் குறித்து வெளியான தகவல்!

இலங்கையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் காவல்துறை பாதுகாப்பில் வைத்து உயிரிழந்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (Human Rights Commission Of Sri Lanka) தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா (Nimal Punchihewa) இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஆயுதங்களை மீட்பதற்காக இரகசிய இடங்களுக்கு சந்தேகநபர்களை அழைத்துச் செல்லும் போது காவல்துறையினர் மேற்கொண்டதுப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை அதிகளவில் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது காவல் நிலையப் பொறுப்பதிகாரிகளின் கடமை எனவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 2023ஆம் ஆண்டில் மாத்திரம் காவல்துறையினருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 9,417 பொது முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த முறைப்பாடுகளில் 44 முறைப்பாடுகள் யுக்திய நடவடிக்கையில் இடம்பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடையவை என்பவை குறிப்பிடத்தக்கது.
218 Views
Comments