மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க ஆகியோர் சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
30

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க ஆகியோர் சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கம்

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க ஆகியோர் சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கம்

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இதுவரை வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (30)  நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் , ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழு மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கான மாநாட்டின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு கட்சியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

அதற்கமைய, துமிந்த திசாநாயக்க இதுவரை வகித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் லசந்த அழகியவண்ண இதுவரை வகித்த கட்சியின் பொருளாளர் பதவிக்கு ஹெக்டர் பெத்மகே நியமிக்கப்பட்டுள்ளார். 

மஹிந்த அமரவீர இதுவரை வகித்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

views

237 Views

Comments

arrow-up