குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மீள பெறப்படும் - நீதி அமைச்சர் தெரிவிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
23

குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மீள பெறப்படும் - நீதி அமைச்சர் தெரிவிப்பு

குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மீள பெறப்படும் - நீதி அமைச்சர் தெரிவிப்பு

குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் மீள பெறப்படும் என நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ இன்று (23) தெரிவித்தார்.

 

தண்டனை சட்டக்கோவைக்கு அமைவாக, 16 வயதிற்குட்பட்ட சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது உடல் ரீதியான தொடர்புகளை வைத்திருந்த ஒருவருக்கு தண்டனை வழங்கப்படும். 

 

எனினும், 14 முதல் 16 வயதிற்கு இடைப்பட்ட சிறுமிகள் தங்களின் விருப்பத்துடன் தொடர்புகளை பேணிய தகவல்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. 

 

கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, குற்றவியல் சட்டத்தை மறுசீரமைக்க அமைச்சுக்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

 

இதன் அடிப்படையில்,  நீதிபதியினால் தண்டணை உத்தரவை பிறப்பிக்கும் வகையில், தண்டனை கோவையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டதாக  நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ குறிப்பிட்டார். 

 

எனினும், சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை இரத்து செய்யுமாறு  சிவில் அமைப்புகளும் மகளிர் அமைப்புகள் சிலவும் கோரிக்கைகளை முன்வைத்ததாக நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

 

அத்தகைய தரப்பினருக்கு மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் விஜேதாச ராஜபக்ஸ குறிப்பிட்டார். 

 

கலந்துரையாடலுக்கு பிறகு திருத்தம் அவசியமா, எவ்வாறான திருத்தம் மெற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார். 

views

228 Views

Comments

arrow-up