COPE குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு உறுப்பினர்களை பெயரிடுமாறு கட்சிகளுக்கு அறிவிப்பு

COPE குழுவில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடுமாறு அந்தந்த கட்சிகளுக்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தெரிவித்தார்.
நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் COPE குழுவில் இருந்து விலகியமை தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எவ்வித விடயங்களும் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
COPE குழுவில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றமை இதுவே முதல் தடவை என பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
COPE குழுவில் இருந்து 10 உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
அநுர குமார திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, வசந்த யாப்பா பண்டார, S.M.மரிக்கார், இரான் விக்ரமரத்ன, சாணக்கியன், பேராசிரியர் சரித்த ஹேரத், தயாசிறி ஜயசேகர, காமினி வலேபோட, ஹேஷா விதானகே ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களே COPE குழுவிலிருந்து விலகியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன COPE குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டமையினால் இவர்கள் அக்குழுவிலிருந்து விலகினர்.
221 Views
Comments