காலியில் பொல்அத்துமோதர ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
18

காலியில் பொல்அத்துமோதர ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

காலியில் பொல்அத்துமோதர ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

காலி - யக்கலமுல்ல பகுதியில் பொல்அத்துமோதர ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 

11 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்கள் தமது பெற்றோருடன் ஆற்றில் நீராடச் சென்றபோது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 

உயிரிழந்த சிறுவர்களின் சடலம் இமதுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

யக்கலமுல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

views

241 Views

Comments

arrow-up