சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வின் போது பொலிஸார் சுற்றிவளைப்பு; களுகங்கையில் குதித்தவர் உயிரிழப்பு

இரத்தினபுரி- களுகங்கையில் மூழ்கி காணாமற்போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சமகிபுர பகுதியை சேர்ந்த 34 வயதான ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி - பௌத்த விகாரைக்கு அருகாமையிலுள்ள களுகங்கையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைப்பதற்காக பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவரும் களுகங்கையில் குதித்துள்ளனர்.
அவர்களில் இருவர் மீட்கப்பட்டதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
226 Views
Comments