பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகு விபத்திற்குள்ளானதில் ஐவர் பலி

ஆங்கிலக் கால்வாயை கடக்க முற்பட்ட படகொன்று விபத்திற்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி 110 குடியேற்றவாசிகளை ஏற்றிச்சென்ற படகொன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது.
படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் குழந்தை ஒன்றும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிகளவானோர் பயணித்தமையே படகு விபத்திற்கான காரணமென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
காணாமற்போனவர்களைத் தேடும் பணிகள், பிரான்ஸ் கடலோர பாதுகாப்பு அதிகாரிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.
47 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ருவாண்டாவுக்கு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் சட்டமூலத்தை பிரித்தானியா நிறைவேற்றிய சில மணி நேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்தும் வகையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
237 Views
Comments