Foxhill விபத்து தொடர்பில் போட்டியாளர்கள் இருவர் கைது

தியத்தலாவயில் இடம்பெற்ற 2024 Foxhill கார் பந்தய விபத்து தொடர்பில் போட்டியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2024 Foxhill கார் பந்தயம் நேற்று(21) தியத்தலாவ கார் பந்தயத் திடலில் ஆரம்பமானது.
பல போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த கார் பந்தயத்தைப் பார்வையிட சுமார் ஒரு இலட்சம் பேர் வருகை தந்திருந்தனர்.
பந்தயத்தின் முதற்கட்டத்தின் போது, ஒரு கார் பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
242 Views
Comments