சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று 917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கைதிகள் இன்று முற்பகல் விடுதலை பெற்று சிறைச்சாலைகளில் இருந்து வௌியேறியதாக சிறைசாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்தார்.
பொது மன்னிப்பின் கீழ் 21 கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 12 கைதிகள் இன்று காலை அங்கிருந்து வௌியேறினர்.
இதனிடையே, புதுவருடத்தினை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கும் இன்று உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு உணவு, இனிப்புப் பண்டங்கள் மற்றும் சுகாதார பொருட்களை கையளிக்க முடியும் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
257 Views
Comments