பன்றிக்கெய்தகுளம் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்றிக்கெய்தகுளம் ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் பன்றிக்கெய்தக்குளம் பகுதியிலுள்ள குறுக்குவீதியூடாக பயணித்த கெப் ரக வாகனம், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த கெப் சாரதி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
211 Views
Comments