வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் 50 கைதிகள் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
08

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் 50 கைதிகள் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் 50 கைதிகள் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் 50 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

தற்கொலை, சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் என்பனவற்றால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி B.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சிறைச்சாலைகளுக்குள் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

உயிரிழந்தவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.

இவர்களில் 03 வௌிநாட்டு கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

views

217 Views

Comments

arrow-up