மொரகஹஹேன துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
08

மொரகஹஹேன துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

மொரகஹஹேன துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழப்பு

மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.



முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.



உயிரிழந்த இருவரும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளனர்.



அவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்புகையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.



பன்னிப்பிட்டிய மற்றும் பிலியந்தலையைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

views

219 Views

Comments

arrow-up