IOC எண்ணெய் விலையை அதிகரித்துள்ளது

லங்கா ஐஓசி நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி அனைத்து வகை டீசல் லீற்றர் 75 ரூபாவாலும், பெற்றோல் லீற்றர் 50 ரூபாவாலும் அதிகரிக்கப்படும்.
54 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள ஐஓசி டீசல் லீற்றர் ஒன்றின் விலை 214 ரூபாவாகவும், 27 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 254 ரூபாவாகும்.
சமீபகால வரலாற்றில் எரிபொருள் விலை கடுமையாக உயர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த விலை அதிகரிப்புடன், IOC வழங்கும் லங்கா பெற்றோல் 92 ஒரு லீற்றர் 254 ரூபாவாகவும், ஒரு லீற்றர் Extra Premium 263 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 214 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா மைல் லீற்றர் 220 ரூபாவாகவும், எக்ஸ்ட்ரா பிரிமியம் 95 பெற்றோல் லீற்றர் 283 ரூபாவாகவும், லங்கா சுப்பர் டீசல் லீற்றர் 252 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
339 Views
Comments