இன்று முதல் மீண்டும் லிட்ரோ எரிவாயு விநியோகம்

லிட்ரோ எரிவாயு விநியோகத்தை இன்று முதல் மீட்டெடுக்கவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் நிவர்த்தி செய்யப்படும் என லிட்ரோ தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக சந்தையில் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் கடன் கடிதங்களை திறப்பதில் உள்ள சிரமம் தான்.
எவ்வாறாயினும், தொடர்ச்சியான கலந்துரையாடலின் விளைவாக, எரிவாயு இருப்புக்களை விடுவிப்பது தொடர்பான கடன் கடிதங்களை நேற்றிரவுக்குள் திறக்க அரச வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
அதன்படி, தற்போது உஸ்வெட்டகேயாவ - தல்தியவத்தை பகுதியில் உள்ள எரிவாயு மிதவைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள இரண்டு கப்பல்களும் எரிவாயு இருப்புக்களை இறக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதுடன், நாளொன்றுக்கு 80,000 சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிடுவதற்கு லிட்ரோ திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும், டொலர் தட்டுப்பாடு காரணமாக கடன் கடிதங்களை திறப்பதில் உள்ள சிரமம் காரணமாக லாஃப்ஸ் தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது.
இந்நிலைமையினால் சில பகுதிகளில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
308 Views
Comments